ஜூலை 14-
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை பென்சில்வேனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது ட்ரம்ப் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
அதிர்ச்சியுற் ட்ரம்ப் கைகளை மேலே தூக்கியவாறும், காதுகளை மூடியவாறும் நடந்து வரும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது.
தாக்குதலின் போது அந்த முன்னாள் அதிபர் காயங்களுக்கும் இலக்கானார்.
நாட்டின் முன்னாள் தலைவரை குறிவைத்து தாக்கும் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது.
பிரச்சனைகளுக்கு அது தீர்வல்ல என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் சாடினார்.
இவ்வேளையில் காசா மீது இஸ்ரேல் நேற்று தொடுத்த தாக்குதலையும் அவர் வன்மையாக கண்டித்தார்.
அதில் 90 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.