ஜோகூர்,ஜூலை 14-
ஜோகூர், மசாய் லாமாவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தவமுனீஸ்வரர் ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நாளை ஆஷாட நவராத்திரி பால்குடத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக வெகு விமர்சையாக நடத்தப்படும் அத்திருவிழாவில், தம்மையே கதி என நாடி வரும் பக்தபெருமக்களுக்கு,, பத்து அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் வாராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
நாளை மாலை 6:30 மணியளவில் தொடங்கும் அத்திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு அன்னையில் அவளின் ஆசிப்பெற அழைப்புவிடுக்கப்படுவதாக ஆலய நிர்வாகி கார்த்திக் தெரிவித்தார்.