பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15-
தன்னை அவமானப்படுத்தும் வகையில் டிக் டாக்கில் அருவருக்கத்தக்க கருத்தை பதிவேற்றும் செய்து, இணைய பகடிவதைப் புரிந்ததற்காக தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்ட டிக் டாக் பிரபலம் ஈஷா
என்ற ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் ஒரு முன்னாள் பெண் போலீஸ்காரர் உட்பட மூவர் விசாரணை வளையத்திற்குள் சிக்கினர்.
ஈஷா மரணம் தொடர்பில் இதுவரையில் 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இன்னும் மூவர் விசாரிக்கப்படவிருகின்றனர். அந்த மூவரில் ஒரு பெண் போலீஸ்காரரும் அடங்குவர். அந்த மூவரும் இந்த வாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் அகமது சுகர்னோ இன்று தெரிவித்தார்.
அந்த மூவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் மேல்நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஈஷாவை அவமானப்படுத்தும் படங்கள் மற்றும் கருத்துக்களை பதிவேற்றம் செய்தற்காக கோலாலமபூர், ஸ்தாப்பாக், கோம்பக் சேத்தியா – வைச் சேர்ந்த ஈஷா கடந்த ஜுலை 5 ஆம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் மரணம் தொடபில் ரவாங்கைச் சேர்ந்த 35 வயதுடைய ஓர் இந்தியப் பெண் மற்றும் 44 வயது லாரி ஓட்டுநர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு காணொளியை வெளியிட்டு, அவமானப்படுத்திய மூன்று முக்கிய நபர்களுக்கு எதிராக ஈஷா-வின் தாயார் P. புஸ்பா ராஜகோபால் கடந்த வாரம் போலீஸ் புகார் செய்துள்ளார்.