புத்ராஜெயா, ஜூலை 16-
புத்ராஜெயா, PRESINT 9-இலுள்ள அடுக்ககம் ஒன்றில், 16ஆவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த 4 வயது சிறுமி பரிதாபமாக மாண்டார்.
நேற்று காலை மணி 7.50 அளவில், அச்சம்பவம் குறித்து தகவல் பெற்றதாக கூறிய புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர்அசிஸ்டன் கோமிசியோனர் அஸ்மாடி அப்துல் அஜீஸ் ,ஆம்புலன்ஸ் வழி புத்ராஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அச்சிறுமி, அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக கூறினார்.
அச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது என்றாரவர்.