இளம்பெண் கொலை; காதலருக்கு ஒரு வாரம் தடுப்புக்காவல்

சிலாங்கூர், ஜூலை 16-

சிலாங்கூர், ஹுலு சிலாங்கூர் , கம்போங் ஸ்ரீ கிளேடாங்-ங்கிலுள்ள தோட்டம் ஒன்றில், நேற்று 25 வயது நூர் ஃபரா கார்த்தினி அப்துல்லா எனும் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.

அப்பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைக்காக, அவரது காதலர் என சந்தேகிக்கப்படும் 26 வயது பொதுச்சேவை ஊழியரை, இன்று தொடங்கி 7 நாள்களுக்குத் தடுப்புக்காவலில் வைக்க, கோல குபு பாரு நீதிமன்றம் அனுமதியளித்தது.

சரவாக், MIRI-க்கைச் சேர்ந்த நூர் ஃபரா கார்த்தினி , கடந்த 11ஆம் தேதி, பெராக், தஞ்சங் மாலிம்-மில் வாடிக்கையாளரிடம் வாகனத்தை ஒப்படைக்கச் சென்ற போது, காணாமல் போனதாக, முன்னதாக போலீசில் புகாரளிக்கப்பட்டிருந்தது.

WATCH OUR LATEST NEWS