கோலாலம்பூர், ஜூலை 16-
இணையப் பகடிவதை சம்பவங்களை துடைத்தொழிக்க, குற்றவியல் சட்டம் 574-இல் திருத்தத்தை மேற்கொள்ளும் பரிந்துரையை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
இணையப் பகடிவதைகளுக்கென குறிப்பிட்ட சட்டத்தை வகுக்கும் வேளை, அது அமலாக்கம் கண்டால், நாட்டில் இணையப் பகடிவதைகள், ஒரு குற்றச்செயலாக கருதப்படும் என பிரதமர் துறையின் சட்டம் மற்றும் கழக சீர்த்திருத்தம் மீதான அமைச்சர் டத்தூஸ்ரீ அஸலினா ஓத்மான் கூறினார் தெரிவித்தார்.
மேலும், இணையப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில், இணையச் சேவை வழங்குநர்களின் கடப்பாட்டை அதிகரிக்க, புதிய சட்டத்தை வகுப்பது குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
குறிப்பாக, இணையப் பகடிவதை உள்பட சிறார்களுக்கு எதிரான தீய உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள பதிவுகளை முறியடிக்க்க, அச்சட்டம் ஆராயப்படுவதாக அஸலினா கூறினார்.