ஜொகூர், ஜூலை 16-
தீயணைப்பு மீட்பு நிலையங்களில் சமைத்த உணவுகளை விநியோகிக்கும் குத்தகையைப் பெற்று தருவதாக கூறும் மோசடிகும்பலிடம் கவனமாக இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தொகையுடன் ஓராண்டு காலத்திற்கு, சம்பந்தப்பட்ட குத்தகையை பெற்றுத்தருவதாக கூறியிருந்த மோசடி பேர்வழிகளை நம்பி பணத்தை இழந்தவர்களிடமிருந்து, தனது தரப்பு புகார்களைப் பெற்றுள்ளதாக, ஜொகூர் தீயணைப்பு மீட்புத்துறை இயக்குநர் சித்தி ரோஹனி நதிர் தெரிவித்துள்ளார்.
அது போன்ற குத்தகைகளைப் பெறும் விவகாரங்களில், பணத்தை செலுத்துவதற்கு முன்பதாக, அதன் உண்மைநிலையை பொதுமக்கள் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்றாரவர்.