கோலாலம்பூர், ஜூலை 16-
இம்மாதம் அக்டோபரில் நடைபெறவிருக்கும் பெர்சாத்து கட்சி தேர்தலில், 5 முதன்மை பதவிகளுக்கு போட்டி நடத்தப்படாது என்ற முடிவுக்கு ஆதரவளிப்பதாக, அதன் இளைஞர் பிரிவான ARMADA தலைவர் வான் அஹ்மத் ஃபைஹ்சல் வான் அஹ்மத் கமால் தெரிவித்தார்.
நடப்பிலுள்ள அரசியல் சவாலை எதிர்கொள்ள, கட்சியில் ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநிறுத்த, அம்முடிவு அவசியமாவதாக அவர் கூறினார்.
பல இன, சமய மக்களின் ஆதரவைப் பெற்றுவரும் பேரிக்காதான் நசியனால் கூட்டணியை மேலும் பலப்படுத்த, பெர்சாத்துவின் நிலைத்தன்மையை உறுதிசெய்வதில், அது சிறந்த அணுகுமுறையாக உள்ளதாக, வான் அஹ்மத் ஃபைஹ்சல் குறிப்பிட்டார்.