கோலாலம்பூர், ஜூலை 16-
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் MAHB-யை கையகப்படுத்தும் பணிகள், இவ்வாண்டின் 3ஆம் காலாண்டில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
MAHB நிறுவனத்தில், குறைந்தது 90 விழுக்காடு பங்குதாதாரர்கள் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அந்நிறுவனத்தைக் கையகப்படுத்தும் பணிகள், வர்த்தக பரிவர்த்தனை சார்ந்துள்ளதால், அதனால், நாட்டிற்கு எவ்வித நிதி தாக்கமும் ஏற்படாது.
பின்னாளில் எடுக்கப்ப்படும் முடிவுகள், அமலாக்கம் காணும் போது, நாட்டின் சட்டத்திற்கும் விதிமுறைகளுக்கும் அவை உட்பட்டிருப்பதை, அரசாங்கம் உறுதிபடுத்தும் எனவும் நாடாளுமன்ற அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த எழுத்துப்பூர்வ பதிலில், நிதியமைச்சு தெரிவித்துள்ளது.