உதவித்தொகை சீரமைப்பு மக்களை சிரமப்படுத்த அல்ல!

ஷா அலாம், ஜூலை 16-

ஒற்றுமை அரசாங்கம் மேற்கொண்டுள்ள உதவித்தொகை சீரமைப்பு, மக்களுக்கு சிரமத்தை வழங்க அல்ல; மாறாக, நாட்டின் பொருளாதரத்தை வலுப்படுத்தவே என மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார், பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ராம்லி.

டீசலுக்கான உதவித்தொகைக்காக அரசாங்கம் 52 பில்லியன் வெள்ளி வரையில் மிகப் பெரிய தொகையை செலவிடும் சூழலில், அந்த எரிப்பொருளை கடத்தும் நடவடிக்கைகளால்,
நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படுகின்றது.

அதன் காரணமாகவே, உதவித்தொகையை தவறாக பயன்படுத்துவதைவிட, உண்மையில் தேவைப்படுகின்ற, சிரமத்தில் உள்ளவர்களுக்கு வழங்க அரசாங்கம் முடிவெடுத்ததாக, YANG BAKAR MENTERI எனும் PODCAST கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ரஃபிஸி கூறினார்.

WATCH OUR LATEST NEWS