சிறந்த அடைவுநிலையைக் கொண்டிருக்காத ஆசிரியர்களுக்கு இரண்டாம் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 16-

சோம்பேறித்தனமும் அலட்சியப் போக்கும் கொண்டுள்ள ஆசிரியர்கள், தங்களைத் திருத்திக்கொள்ள, அரசாங்கம் வாய்ப்பளிக்க வேண்டுமென மலேசிய இஸ்லாமிய ஆசிரியர் அமைப்பின் தலைவர் அஜீஸீ ஹசன் வலியுறுத்தினார்.

அத்தகைய ஆசிரியர்கள், அவ்வாறு இருப்பதற்கான முதன்மைக் காரணங்களைக் கண்டறிந்து, அவர்கள் தங்களை திருத்திக்கொள்வதற்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றாரவர்.

மேலும், கல்வி துறை தலைவர் நிர்ணயித்த அளவுகோலின் அடிப்படையில், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கபட வேண்டுமே தவிர, அதில், அரசியல் மற்றும் ஆதிக்கம் உள்ளவர்களின் தலையீடுகள் இருக்கக்கூடாது எனவும் அஜீஸீ ஹசன் கூறினார்.

கட்டொழுங்கு பிரச்சனை, சிறந்த அடைவுநிலையை கொண்டிருக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் கூறியிருந்தது தொடர்பில், அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

WATCH OUR LATEST NEWS