சட்டவிரோதப் பண மாற்றம், முதலீட்டு ஆலோசகர் மீது குற்றச்சாட்டு

ஷா அலாம், ஜூலை 16 –

பத்து லட்சம் வெள்ளி சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் முதலீட்டு ஆலோசகர் ஒருவர், தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

39 வயது சைபுல் நிஜாம் சஹாருதீன் என்ற அந்த முதலீட்டு ஆலோசகர், நீதிபதி ஷரிஃபா நோராஸ்லிதா சையத் சலீம் இடித் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

அந்த முதலீட்டு ஆலோசகர் கடந்த ஆண்டு ஜுலை 27 ஆம் தேதி கிள்ளான், CIMB Islamic Bank Berhad என்ற வங்கியில் சைபுல் நிஜாம் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

PMBIS Growth Venture நிறுவனத்தின் உரிமையாளரான சைபுல் நிஜாம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 15 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS