கூலிம் , ஜூலை 16-
எலி மருந்து கலக்கப்பட்ட Keropok நொறுக்குத்தீனி பண்டத்தை பொட்டலமாக கட்டி, தனது தோட்டத்தில் தொங்கவிட்டு, இரண்டு சிறார்கள் இறப்பதற்கு காரணமாக இருந்த ஆடவருக்கு எதிரான தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
33 வயதுடைய அந்த நபர், இன்று காலையில் கூலிம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிப்பதற்கு போலீசார் அனுமதி பெற்றனர்.
தோட்ட உரிமையானரான அந்த நபருக்கு எதிரான தடுப்புக்காவல், இதற்கு முன்பு கடந்த ஜுலை 11 ஆம் தேதி பெறப்பட்டு இருந்தது.
கடந்த ஜுலை 7 ஆம் தேதி கூலிம், கம்போங் படங் என்ற இடத்தில் பொட்டலமாக கட்டப்பட்டு இருந்த, எலி மருந்து கலக்கப்பட்ட Keropok நொறுக்குத்தீணி பண்டத்தை இரண்டு சிறார்கள் உட்கொண்டதில் தீவிர சிசிக்சைக்குப் பின்னர் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தனர்.
இரண்டு சகோதர்களான 3 வயது முஹம்மது அகில் சயுகி நூர் சுஃப்யான், 2 வயது முஹம்ஸ் லூத் சௌகி ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது.