போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்

தங்சோங் மாலிம், ஜூலை 16-

தங்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மாணவியான 25 வயது நூர் ஃபரா கர்தினி அப்துல்லா, கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 26 வயது ஆடவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

அந்த ஆடவர் LANS KOPERAL என்ற அந்தஸ்தில் Slim River போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் என்று நம்பப்படுவதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் கூறியுள்ளார்.

பேராக்கில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி, வாடிக்கையாளரிடம் வாடகை வாகனத்தை ஒப்படைத்து விட்டு காணாமல் போனதாக கூறப்படும் நூர் ஃபரா கர்தினி -யின் உடல் நேற்று திங்கட்கிழமை பிணமாக கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த போலீஸ்காரர் தன்னுடன் மிக நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அவரின் மனைவியிடம் அம்பலப்படுத்தப்போவதாக அந்த மாணவி மிரட்டியைத் தொடர்ந்து இந்த கொலை நடத்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அந்த மாணவியின் உடல் உலு சிலாங்கூர், ஸ்ரீ கிளெடாங் கிராமம் -கில் சிலாங்கூர் போலீசாரால் கண்டு பிடிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS