பணி ஓய்வுப்பெற்ற ஆசிரியர்கள் வரவேற்கப்படுகின்றனர்

கோலாலம்பூர், ஜூலை 16-

ஆங்கில மொழியில் திறன்பெற்ற பணி ஓய்வுப்பெற்ற ஆசிரியர்கள், மீண்டும் கல்வி சேவைக்கு திரும்புவதை கல்வி அமைச்சு வரவேற்பதாக அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

ஆர்வம் கொண்டுள்ள பணி ஓய்வுப்பெற்ற ஆசிரியர்கள் மீண்டும் கற்றல், கற்பித்தல் துறைக்கு திரும்புவதற்கு விருப்பம் கொண்டு இருப்பார்களேயானால் அவர்களை மீண்டும் எடுப்பதில் கல்வி அமைச்சு மகிழ்ச்சி கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பணி ஓய்வுப்பெற்ற ஆசிரியர்கள் குத்தகை அடிப்படையில் கல்விச் சேவைக்கு திரும்பி தங்களின் நிறைவான பங்களிப்பு வழங்கியிருப்பதையும் ஃபத்லினா சிடெக் நினைவுக்கூர்ந்தார்.

WATCH OUR LATEST NEWS