மத்திய அரசாங்கத்தின் கடன் உயர்த்துள்ளது

கோலாலம்பூர், ஜூலை 16-

மத்திய அரசாங்கத்தின் கடன் விகிதம் 1.22 trilion- ஆக அதிகரித்துள்ளது என்று பிரதமர்டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் இந்த கடன் விகிதம் 1.17 trilion- ஆக இருந்தது. தற்போது 50 பில்லியன் அதிகரித்து 1.22 trilion- ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் ஜனவரி மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் மொத்தம் 70.5 பில்லியன் வெள்ளியை, நிகர கடனாக அரசாங்கம் பெற்றுள்ளது என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS