ஈப்போ, ஜூலை 16-
தனது அண்ணனையும், அண்ணியையும் கத்தியினால் வெட்டிக்கொன்ற நபர், தனக்கு எதிரான கொலைக்குற்றத்தை ஈப்போ உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அப்துல் வஹாப் முகமது முன்னிலையில் நிறுத்தப்பட்ட 63 வயது இங் சுன் மிங் என்ற நபருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலை 6 ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் ஐபோக், தமன் பெர்சம் அமன்-னில் தனது 66 வயது அண்ணன் இங் சுன் மிங் மற்றும் 61 வயது அண்ணி ஓய் டின் லு என்பவரை வெட்டிக்கொன்றதாக இங் சுன் மிங் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
மரணத் தண்டனை அல்லது 40 வருட சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அவர் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.