புத்ராஜெயா, ஜூலை 16-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM – மினால் கடந்த ஜுலை 11 ஆம் தேதி முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்த சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கும் ஒரு தம்பதியர் உட்பட நான்கு பேர் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த நால்வருக்கு எதிரான தடுப்புக்காவல் இன்று செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவரை புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நிதிமன்றம் விடுவித்தது.
அந்த நால்வரையும் தலா ஒரு லட்சம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது. ஜாமீன் பணத்தில் முதலில் தலா 20 ஆயிரம் வெள்ளியை முன்பணமாக செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொது மக்கள் வழங்கிய நன்கொடையை தவறாக பயன்படுத்தியது தொடர்பில் தம்பதியர் உட்பட நால்வர் SPRM- மினால் கைது செய்யப்பட்டனர்.