அந்த மாணவியின் உடல் கிட்டத்தட்ட அழுகி விட்டது

தங்சோங் மாலிம் , ஜூலை 16-

தங்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மாணவியான 25 வயது நூர் ஃபரா கர்தினி அப்துல்லா – வின் உடல் கிட்டத்தட்ட அழுகி விட்டதாக சிலாங்வர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

ஒரு போலீஸ்காரரான 26 வயது தனது காதலனால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் சரவா, மீரியை சேர்ந்த அந்த மாணவி, சில தினங்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் Slim River போலீஸ் நிலையத்தில் LANS KOPERAL அந்தஸ்தில் உள்ள ஒரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ ஹுசைன் ஓமர் குறிப்பிட்டார்.

கொலைக்கான காரணங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. காரை ஒப்படைக்கச் சென்ற அந்த மாணவி கடந்த ஜுலை 10 ஆம் தேதி முதல் காணவில்லை.

அவரின் அழுகிய உடல், நேற்று திங்கட்கிழமை உலு சிலாங்கூர், உலு பெர்ணம், கம்போங் ஸ்ரீ கிளெடாங்-கில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் சிலாங்கூர் போலீசாரால் கண்டு பிடிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS