ஜார்ஜ் டவுன், ஜூலை 16-
ஆட்கொல்லியான களைக்கொல்லி மருந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
களைக் கொல்லி மருந்து விற்பனை 1974 ஆம் ஆண்டு நஞ்சு மருந்து சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த உயிர் கொல்லி மருந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதற்கு நடப்பு சட்டம் முற்றாக தடை விதிக்கிறது.
இந்நிலையில் கெடா, கூலிமில் எலி மருந்து கலக்கப்பட்ட Keropok நொறுக்குத்தீணியை உட்கொண்டதன் காரணமாக இரண்டு சிறார்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பினாங்கு பயளீட்டாளர் சங்கத் தலைவர் மொஹிதீன் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.