கோலாலம்பூர், ஜூலை 16-
தமக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை 6 ஆண்டுகளாக குறைத்து இருக்கும் மன்னிப்பு வாரியம், எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் கைதியாக இருப்பதற்கு கூடுதல் உத்தரவு ஒன்றை பிறப்பித்ததாக கூறப்படுவதை தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
16 ஆவது மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியம் பிறப்பித்த கூடுதல் உத்தரவை சீராய்வு செய்வதற்கான அனுமதியைப் பெறுவதில் நஜீப் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தோல்விக் கண்டார்.
கூடுதல் உத்தரவை சீராய்வு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நஜீப், அத்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் ஃபர்ஹான் முஹம்மது ஷஃபீ தெரிவித்தார்.