கோலாலம்பூர், ஜூலை 16-
மந்திரி பெசார்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் ஆகியோருக்கான 143 ஆவது கூட்டம் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்றார்.
மாநில அரசாங்கத்திற்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு / குறிப்பாக, மாநில பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வு குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக பிரதமர் தமது முகநூலில் பதிவேற்றம் செய்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில் இரண்டு துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் மற்றும் அனைத்து மாநிலங்களின் மந்திரி பெசார்கள், முதலமைச்சர்கள் கலந்து கொண்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார். .