அருவருக்கத்தக்க கருத்தை பதிவேற்றம் செய்த இருவர் சிக்கினர்

கோலாலம்பூர், ஜூலை 16-

கடந்த ஜுலை 9 ஆம் தேதி டிக் டாக் தளத்தில் நாடாளுமன்ற அமர்வின் மறு ஒளிபரப்பு தொடர்பில் அருவறுக்கத்தக்க மற்றும் ஆத்திரமூட்டும் கருத்துகளை பதிவேற்றம் செய்ததாக நம்பப்படும் இருவர் மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையமான MCMC-விடம் சிக்கினர்..

அந்த இரு நபர்களின் அருவருக்கத்தக்க கருத்து பதிவேற்றம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் அவ்விருவரையும் MCMC அடையாளம் கண்டதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று MCMC ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அந்த இரு நபர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன் அவர்களின் விவேக கைப்பேசி மற்றும் Sim கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1998 ஆம் ஆண்டு மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணைய சட்டத்தின் கீழ் அவ்விருவரும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர். அதற்கு ஏதுவாக அவ்விருவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS