புத்ராஜெயா, ஜூலை 17-
மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான MH 17 விமானம், உக்ரெயின் வான் போக்குவரத்து பாதையில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்த இன்று ஜுலை 17 ஆம் தேதியுடன் சரியாக பத்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன..
நெதர்லாந்து தலைநகர் Amsterdam- மிலிருந்து 298 பேருடன் கோலாலம்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த போயில் 777 ரக விமானம் சுடப்பட்டு, அனைவரும் உயிரிழந்த இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு, மலேசியா தொடர்ந்து போராடி வருவதாக போக்குவரத்து அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த தரப்பினரை அனைத்துலக சட்டங்களின் மூலம் உரிய தண்டனையை பெறுவதற்கும், நீதி கிடைப்பதற்கும் மலேசியா கொண்டிருக்கும் தனது கடப்பாட்டில் இருந்து இம்மியளவும் விலகி விடவில்லை என்று போக்குவரத்து அமைச்சு உறுதி தெரிவித்துள்ளது.
