கோலா திரெங்கானு, ஜூலை 18-
மன அழுத்தத்தைத் குறைக்கும் SPA மனமகிழ்வு சிகிச்சையின் போது பெண் பணியாள ரை மானபங்கம் செய்ததாக மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர். கோலத்திரெங்கானு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
கோலத்திரெங்கானுவில் உள்ள புலாவ் பெர்ஹெந்தியன் தீவைச் சுற்றிப் பார்க்க வந்த மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த 23 வயது நூரோத் யாசின் என்ற அந்த இளைஞர், 19 வயது SPA பெண் பணியாளரிடம் பாலியல் வன்முறையை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஆடவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணியளவில் Besut, Pulau Perhentian- தீவில் உள்ள ஒரு SPA மையத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் பத்து ஆண்டு சிறை மற்றும் அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 354 ஆவது பிரிவின் கீழ் அந்த சுற்றுப்பயணி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.