கோலாலம்பூர், ஜூலை 18-
போலீஸ்காரரை நோக்கி கடும் சொற்களை பயன்படுத்திய குற்றத்திற்காக தொழிற்சாலை ஆப்ரேட்டர் பணியாளர் ஒருவக்கு மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 5 ஆயிரத்து 450 வெள்ளி அபராதம் விதித்தது.
ஜே. டேனியல் என்ற 31 வயதுடைய அந்த தொழிற்சாலை பணியாளர், கடந்த ஜுன் 17 ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் மலாக்கா, பண்டார் ஹிலிர் போலீஸ் நிலையத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் சாரதா ஷியென்ஹா முகமட் சுலைமான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட டேனியலுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
எனினும் தனக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகளை டேனியல் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.