கிளந்தான், ஜூலை 22-
கிளந்தான், பாசிர் புத்தே- வில் இன்று காலை 6.56 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மாது ஒருவர் உயிரிழந்த வேளையில் இருவர் படுகாயத்திற்கு ஆளாகினர்.
காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய 30 வயது மாது, சம்பவ இடத்திலேயே மாண்டதாக பாசிர் புத்தே தீயணைப்பு, மீட்புப்டை செயலாக்க கொமந்தர் முஹம்மத் தேரி வஹாப் தெரிவித்தார்.
சிறார் உட்பட நால்வர் பயணித்த Perodua Viva கார், எதிரே வந்த Yoyota வாகனத்துடன் மோதியதாக கூறப்படுகிறது. காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஒன்பது வீரர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.