பத்து பஹாட், ஜூலை 22-
வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மின்சாரக் கம்பத்தில் மோதி, கால்வாயில் தடம்புரண்டதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் ஜோகூர்,பத்து பஹாட், ஜாலான் முகமது அகில் என்ற இடத்தில் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட ஆடவர் செலுத்திய கார், ஜாலான் பகாவ் சிந்தோக்- கிலிருந்து ஜாலான் சியாபந்தர் – ரை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் ஷாருலானுார் முஷாதத் அப்துல்லா தெரிவித்தார்.
கடுமையான காயங்களுக்கு ஆளாகிய 51 வயது சுங் வூன் கிம் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் கொண்டிருப்பவர்கள் போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.