தஞ்சோம் மாலிம், ஜூலை 22-
தஞ்சோம் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான 25 வயது நூர் ஃபர்ஹானா கார்த்தினி அப்துல்லா கொலை தொடர்பில் அவருக்கு சொந்தமானது என்று நம்பப்படும் கார் சாவியை, அரச மலேசிய போலீஸ் படையின் தடயவியல் முக்குளிப்போர், கைப்ற்றியுள்ளனர்.
சிலிம் ரீவர் அருகில் ட்ரோலாக், கம்போங் பாரு 4, சுங்கை ட்ரோலாக்- கில் ஒரு ஜோடி சாவியை முக்குளிப்போர் கைப்பற்றினர். அந்த முன்னாள் மாணவியின் கொலைக்கு பிறகு அவரின் காதலன் என்று நம்பப்படும் போலீஸ்காரர் ஒருவர், துரோலாக் ஆற்றுப்பாலத்தில் அந்த முன்னாள் மாணவியின் உடமைகளை வீசியுள்ளார்.
அந்த ஆற்றுப்பாலத்திலிருந்து சுமார் 50 மீடடர் தூரத்தில் அந்த சாவிகளை இன்று காலை 11.20 மணியளவில் முக்குளிப்போர் மீட்டுள்ளனர். இதே இடத்தில் சுமார் ஐந்து மீட்டர் தூரத்தில் அந்த மாணவியை மணிபர்ஸையும் முக்குளிப்போர் மீட்டனர்.
சரவா, மீரியை சேர்ந்த 25 வயதுடைய நூர் ஃபர்ஹானா கார்த்தினி, கடந்த வாரம் திங்கட்கிழமை, உலு சிலாங்கூர், உலு பெர்ணத்தில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.