புத்ராஜெயா, ஜூலை 22-
மதுபான நிறுவனமான பீர் கம்பெனி ஒன்று, சீனப்பள்ளிக்கு வழங்கிய நிதி விவகாரத்தை சர்சை செய்து வரும் பாஸ் கட்சியை கல்வி துணை அமைச்சர் வோங் கஹ் வோ சாடினார்.
மலாய்க்காரர்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டிவிடும் நோக்கில் உண்மைக்கு புறம்பான தகவலை சிலாங்கூர் மாநில பாஸ் கட்சி வழங்கி வருகிறது என்று வோங் கஹ் வோ குறிப்பட்டார்.
சீனப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் சம்பந்தப்பட்ட பீர் கம்பெனி, கடந்த 30 ஆண்டுகளாக நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு 30 ஆவது ஆண்டு நிறைவு விழா என்பதால் சிப்பாங்கில் நடைபெற்ற அந்த நிதி திரட்டும் நிகழ்வில் தாமே கலந்து கொண்டதாக துணை அமைச்சர் வோங் கஹ் வோ குறிப்பிட்டார்.
அதிகமான மாணவர்கள் நன்மை பெறுவதற்காக அந்த நிறுவனத்தின் வாயிலாக இதுவரையில் 40 கோடிக்கும் அதிகமான வெள்ளி திரட்டப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்த.
சம்பந்தப்பட்ட பீர் கம்பெனியின் சின்னத்தை தாங்கிய மாதிரி காசோலையைப் பெற்ற சிப்பாங் எம்.பி. ஐமன் அதிரா- வை இலக்காக கொண்டு பாஸ் கட்சி முதலில் சாடியது.
தற்போது இன விவகாரத்தை ஏற்படுத்துவதற்காக அந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சிக்கே பாஸ் கட்சி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக வோங் கஹ் வோ குறிப்பிட்டார்.