மலேசிய கடப்பிதழ் தரம் உயர்த்தப்படவிருக்கிறது

புத்ராஜெயா, ஜூலை 22-

மலேசிய கடப்பிதழ் தரம் உயர்த்தப்படவிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுஷன்தெரிவித்துள்ளார்.

மலேசிய கடப்பிதழின் பாதுகாப்பு அம்சங்களில் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

உலகில் சக்தி வாய்ந்த கடப்பிதழ் பட்டியிலில் மலேசிய பாஸ்போர்ட் தொடர்ந்து விளங்கிடுவதற்கு அதன் தரம் தொடர்ந்து கருத்தில் கொள்ளப்படும்.

2024 ஆம் ஆண்டு Global Passport Power Rank தர வரிசையில் மலேசியாவின் கடப்பிதழ் 11 இடத்தில் இருப்பதுடன் செல்வாக்குமிக்க கடப்பிதழாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று சைஃபுத்தீன் குறிப்பிட்டார்.

இன்று புத்ராஜெயாவில் 2024 ஆம் ஆண்டிற்கான மலேசிய குடிநுழைவுத்துறை தினத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

மலேசிய கடப்பிதழை பத்து ஆண்டுகள் வரை செல்லத்தக்க பயண ஆவணமாக பயன்படுத்துவதற்கான உத்தேச அமலாக்கத் திட்டம் , தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS