புத்ராஜெயா, ஜூலை 22-
நாடு தழுவிய நிலையில் 5 வங்கிகளின் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று மதிய உணவு நேரத்தில் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.
தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமான NUBE- பின் உறுப்பினர்களான 250 க்கும் மேற்பட்டவர்கள், வங்கிகள் சம்பந்தப்பட்ட பலதரப்பட்ட விவகாரகளை மேற்கோள்காட்டி இந்த மறியலில் இறங்கினர்.
தொழிற்சங்கத்தை முறியடிக்கும் முயற்சிகள், வங்கி தலைமை செயல்முறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அபரிமிதமான சம்பளம், பயிற்சிக்கான அணுகல், நியாயமற்ற ஊதிய முறை மற்றும் வேலையிட பாதுகாப்பு ஆகியவற்றை முன்நிறுத்தி அவர்கள் மறியல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வங்கியின் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஏற்ப நியாயமான சம்பளம் கிடைப்பதை எல்லா நிலைகளிலும் உறுதி செய்ய வேண்டும் என்று பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.