பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22-
கணுக்கால் வலியினால் அவதியுற்று வருவதாக கூறப்படும் பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் தியோ, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறுகிய கால விடுவிப்பில் செல்கிறார்.
அதேவேளையில் கோலாலம்பூரில் சில வேலைகளை முடிப்பதற்கும், தனது பிள்ளைகளுடன் விடுமுறையை கழிக்கவும் இந்த குறுகிய கால விடுப்பில் செல்வதாக அவர் அறிவித்துள்ளார்.
தனது கணுக்காலில் ஏற்பட்டுள்ள தீராத வலியினால் ஜக்தீப் சிங் தற்போது சிரம்பானில் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.