ஜோகூர், ஜூலை 22-
ஜோகூர், இஸ்கந்தர் புத்தேரி-யில் உள்ள Eco Galleria Shoping Centre பேரங்காடியில் காணாமல் போன 6 வயது சிறுமியை கண்டு பிடிக்கும் நபருக்கு 50 ஆயிரம் வெள்ளி ரொக்க வெகுமதி வழங்கப்படும் என்று ஜோகூர்பாருவை தளமாக கொண்ட ஆலோசனை நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
ஜோகூர் பாரு, தாமன் செட்டியா இன்டா-வில் உள்ள தங்கள் நிறுவனத்திற்கு அந்த சிறுமியை கொண்டு வந்து சேர்க்கின்றவருக்கும் இந்த ரொக்கத் தொகை வெகுமதியாக வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் இன்று சுவரொட்டியை வெளியிட்டுள்ளது.
அதேவேளையில் அந்த சிறுமியை கண்டுபிடிக்கும் அளவிற்கு தகவல் அளிப்பவருக்கும் 50 ஆயிரம் வெள்ளி வெகுமதி வழங்கப்படும் என்று ALBB Consultancy Sdn. Bhd. என்ற அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆல்பர்டைன் லியோ ஜியா ஹுய் என்ற அந்த ஆறு வயது சிறுமி கண்டு பிடித்து, அழைத்து வருகின்றவர்களுக்கு மற்றொரு நிறுவனமும் 10 ஆயிரம் வெள்ளி வெகுமதியை வழங்க முன்வந்துள்ளது. ஜோகூர்பாரு, தாமன் ஸ்துலாங் லாவுட்- டைச் சேர்ந்த SIX CAFE நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையை அந்த பேரங்காடி மையத்தில் தனது தந்தையுடன் இருந்த போது அந்த ஆறு வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போனது ஜோகூர்பாருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.