விளக்கு கம்பத்தை மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு

பஹாங், ஜூலை 23-

பஹாங், ஜாலான் ஜெரன்டுட்-தேமெர்லோ சாலையின் 18ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு மணி 8.30 அளவில், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிளோட்டி, விளக்கு கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானதில், அவரும் அவரது 6 வயது மகனும் சமபவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதேவேளையில், உடன் பயணித்த அவரது மனைவியும் மற்றொரு மகனும் காயங்களுக்கு இலக்காகினர்.

மாமியார் வீட்டிலிருந்து தாமன் புக்கிட் கெட்டுப்பட்-ட்டிலுள்ள அவர்களது வாடகை வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது அத்துயரம் நிகழ்ந்தது.

WATCH OUR LATEST NEWS