ஜார்ஜ் டவுன் , ஜூலை 23-
பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓய்வில் செல்லும்படி, தாம் யாரும் கேட்டுக்கொள்ளவில்லை என இரண்டாவது துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ தெளிவுபடுத்தினார்.
கோலாலம்பூரில் சிகிச்சையைப் பெற வேண்டியிருப்பதால், தாமாகவே மருத்துவ விடுப்பில் செல்ல கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
தமக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டு ஈராண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அது மோசமாகியுள்ளதால், அதற்கான சிகிச்சையைப் பெற வேண்டி, தாம் மருத்துவ விடுப்பை பெற்றுள்ளதாகவும் ஜக்தீப் குறிப்பிட்டார்.