
ஜோகூர் , ஜூலை 23-
ஜோகூர் ,இஸ்கந்தர் புத்தேரி, ECO கேலரியா வர்த்தக மையத்தில், கடந்த சனிக்கிழமை காணாமல் போன 6 வயது சிறுமி தொடர்பில், ஒரு பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டினரான 28 முதல் 55 வயதுக்கு உட்பட்ட அம்மூவரும் நேற்று பிற்பகல் மணி 1.30 அளவில், கெலாங் பத்தா சுற்றுவட்டார பகுதியில் கைது செய்யப்பட்டதாக,ஜோகூர் போலீஸ் தலைவர் கோமிஷனர் எம்.குமார் தெரிவித்தார்.
சிறுமி காணாமல் போனதாக கிடைப்பெற்ற புகார், தற்போது,குற்றவியல் சட்டம் 365-இன் கீழ் கடத்தலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றாரவர்.