கோலாலம்பூர், ஜூலை 23-
கலவரம் மூண்டுள்ள வங்காளதேசத்திலிருந்து மலேசிய மாணவர்களையும் மலேசியர்களையும் தாயகம் அழைத்துவர, சிறப்பு விமானம் இன்று காலை மணி 7.30 அளவில், இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் -மின் உத்தரவின் கீழ், புறப்பட்டுள்ள AIRASIA-வின் AIRBUS A330 விமானம், டாக்கா-விலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் அனைத்துலக விமான நிலையத்தை மலேசிய நேரப்படி காலை மணி 9.20 அளவில் சென்றடைந்ததாக கூறப்படுகின்றது.
பொதுச்சேவைத் துறையில் வழங்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீடு காரணமாக, வங்காளதேசத்தில் கலவரம் மூண்டுள்ள நிலையில், அங்கு, 124க்கும் மேற்பட்ட மலேசிய மாணவர்களும் மலேசியர்களும் சிக்குண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.