தவறான மொழிப்பெயர்ப்பு; மன்னிப்பு கோரியது META நிறுவனம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 23-

கடந்த சனிக்கிழமை, நாட்டின் 17ஆவது பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் அவர்களின் அரியணை அமரும் நிகழ்ச்சி குறித்து, RTM வெளியிட்டிருந்த பதிவு தவறாக மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டிருந்ததற்காக, FACEBOOK உரிமையாளரான META நிறுவனம் மன்னிப்பு கூறியுள்ளது.

நுட்ப ரீதியில் எழுந்திருந்த அத்தவறு சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தென்கிழக்கு ஆசியாவுக்கான META நிறுவனத்தின் பொது கொள்கை பிரிவு இயக்குநர் ரஃபேல் பிராங்கல் தெரிவித்தார்.

மலேசிய அரச குடும்பத்தின் மீது தங்கள் தரப்பு மிகுந்த மரியாதையை வைத்திருப்பதாக கூறிய அவர், நடந்த தவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கோருவதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS