பெட்டாலிங் ஜெயா, ஜூலை 23-
முஃபகாட் நேஷனல்-லின் கீழ் மீண்டும் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமானால், பெர்சத்து கட்சியை நிராகரிக்க வேண்டுமெனும் நிபந்தனை.
அம்னோ-வின் அத்தகைய போக்கு தங்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வதில், அக்கட்சி ஆர்வம் கொண்டிருக்காததை புலப்படுத்துவதாக, பாஸ் கட்சியின் ஆன்மீக பிரிவு தலைவர் ஹாசிம் ஜெசின் தெரிவித்துள்ளார்.
மலாய்க்காரர்களின் முதன்மைக் கட்சிகளாக விளங்கும் பாஸ், அம்னோ,பெர்சத்து ஆகியவை ஒன்றிணைந்து இருக்க இணக்கம் காணப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட தலைவர்களின் போக்கு காரணமாக, அது நிறைவேறாமல் போயுள்ளது.
மலாய்க் கட்சிகள் பிரிந்திருக்கக்கூடாது என கடவுள் வலியுறுத்தும் வேளை, பெர்சத்து-வை புறக்கணிப்பது அவரது உத்தரவுக்கு முரணான செயல்.
வேறு வழிகள் இல்லையென்றால், நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், பாஸ்-சும் பெர்சத்து-வும் அம்னோ-வை எதிர்த்து களமிறங்கும் என ஹாசிம் கூறினார்.