பெட்டாலிங் ஜெயா, ஜூலை 23-
நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில் ஒத்துழைப்பது குறித்து,அம்னோ-தலைவர்களுடன் பாஸ் கட்சி அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக, அதன் தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபாத்லி ஷாரி கூறியுள்ள விவகாரம்./
பாஸ் கட்சியின் அந்நடவடிக்கையின் மீது, தாங்கள் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவில்லை என பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.
நடப்பில், மலாய்க்கட்சிகள் தனித்தனியாக பிரிந்திருக்கும் சூழலில், நாட்டின் 16ஆவது பொதுதேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ள, அத்தகைய ஒத்துழைப்பு அவசியமாவதாகவும் அவர் கூறினார்