ஜார்ஜ்டவுன் , ஜூலை 23-
பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ பதவி மாற்றப்படவிருப்பதாக கூறப்பட்டு வரும் ஆருடத்தை பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் மறுத்துள்ளார்.
ஜக்டீப் சிங் டியோ பதவி மாற்றம் தொடர்பாக எந்தவொரு விவகாரமும் விவாதிக்கப்படவில்லை என்று முதலமைச்சர் விளக்கினார்.
மருத்துவ சிகிக்சைக்கு செல்லவிருப்பதாக கூறி கடந்த ஜுலை 19 ஆம் தேதி, குறுகிய கால விடுமுறைக்கான விண்ணப்பத்தை மட்டுமே ஜக்டீப் சிங் சமர்ப்பித்துள்ளார். மற்றப்படி எந்தவொரு விவாகரமும் அவருடன் பேசப்படவில்லை என்று சோவ் கோன் யோவ் தெளிவுபடுத்தினார்.
தற்போது கணுக்கால் வலியினால் அவதியுற்று வரும் ஜக்டீப் சிங், தனிப்பட்ட விவகாரத்திற்காக குறுகிய கால விடுறையில் செல்வதாக நேற்று அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.