புத்ராஜெயா, ஜூலை 23-
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கடற்படை பயிற்சி வீரர்,சுல்பர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னைன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் ஆறு முன்னாள் மாணவர்களுக்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் .இன்று சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்தது.
சம்பந்தப்பட்ட முன்னாள் மாணவர்கள், கடற்படை பயிற்சி வீரர் சுல்பர்ஹான் ஒஸ்மான் மரணத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர். அந்த ஆறு முன்னாள் மாணவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நோக்கமில்லா கொலை குற்றச்சாட்டை ரத்து செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலா 18 ஆண்டு சிறைத் தண்டனையானது, அவர்களின் புரிந்துள்ள குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அமையவில்லை என்று நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற ஹதரியா சையத் இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
21 வயது கடற்படை பயிற்சி வீரரான சுல்பர்ஹான் ஒஸ்மான் , கடநத் 2017 ஆம் ஆண்டு ஜுன் முதல் தேதி செர்டாங் மருத்துவமனையில் சுயநினைவு திரும்பாமலேயே மாண்டார். அந்த பயிற்சி வீரின் உடலில் சம்பந்தப்பட்ட ஆறு முன்னாள் மாணவர்களும் ஸ்தீரிப்பெட்டியின் சூடு வைத்து. உடலை 80 விழுக்காடு ரணமாக்கி, குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
முஹம்மது அக்மல் ஜுஹைரி அஸ்மல், / முஹம்மது அஜாமுதீன் மட் சோஃபி, /முஹம்மது நஜிப் முகமது ராசி,/ முஹம்மது அபிஃப் நஜ்முதீன் அஸாஹத் ,/ முகமது ஷோபிரின் சப்ரி / மற்றும் அப்துல் ஹக்கீம் முகமட் அலி ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு மாணவர்கள் ஆவர்.