புத்ராஜெயா, ஜூலை 23-
தமது காதலியான பிலிப்பைன்ஸ் பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக தனக்கு விதிக்கப்பட்ட 35 ஆண்டு சிறைத் தண்டனையை குறைக்குமாறு ஒரு வங்காதேச ஆடவர் செய்து கொண்ட மேல்முறையீட்டை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
மூவர் அடடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிம், அந்த வங்காளதேப் பிரஜையின் மேல்முறையீட்டை நிராகரிப்பதாக அறிவித்தார்.
முகமது மசூத் ராணா என்ற அந்த வங்காளதேப் பிரஜைக்கு உயர் நீதிதமன்றம் விதித்த 12 பிரம்படித்தண்டனையும் நிலைநிறுத்துவதாக அவர் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் கடந்த 2016 ஆம் ஆ ண்டு டிசம்பர் 23 ஆம் தேதி அதிகாலையில் ஜோகூர்பாரு, உலு திரம், தாமன் புத்ரி வாங்சா-வில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தமது காதலியான Condo Liezyl Ponce என்பவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.