மூன்று போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 23-

கடந்த ஜனவரி மாதம் ஆடவர் ஒருவரை கொலை செய்ததாக உதவி சுப்பரின்டெண்டென் போலீஸ் அதிகாரி உட்பட மூன்று போலீஸ்காரர்கள் லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

45 வயது அசார் அமீர் என்ற உதவி சுப்பரின்டெண்டென் மற்றும் இரண்டு Corporal- களான 36 வயது ஷஹரில் பிர்தௌஸ் சல்லே மற்றும் 36 வயது ஷஹாரி ஷா மாட் சாத் ஆகிய மூவர் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்த இந்த மூவரும் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி லங்காவி போலீஸ் தலைமையகத்தில் 32 வயது ஹபீஸ் சலே என்பவரை கூட்டாக சேர்ந்து கொலை செய்ததாக குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS