சுபாங் ஜெயா, ஜூலை 23-
கடந்த ஜுலை 14 ஆம் தேதி சுபாங் ஜெயா, ஜாலான் ஜெங்கா SS17 இல் மொழிப்பெயர்ப்பாளர் ஒருவருக்கு சொந்தமான Perodua Myvi காரின் கண்ணாடியை உடைத்து, சேதப்படுத்தியதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளோட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
காலை 10.40 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஒரு மொழிப்பெயர்ப்பாளரான மாது செலுத்திய காரை பின் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிளோட்டி, ஒரு கல்லைத் தூக்கி எறிந்து காரின் பின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமத் தெரிவித்தார்.
சம்பவம் நிகழும் போது தனது கணவருடன் காரில் இருந்த 42 வயதுடைய மாது, சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி யார் என்று தெரியவில்லை என்றும் அவருடன் தாம் எந்தவொரு சர்ச்சையும் கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.