பகாங் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சியா?

குவாந்தன், ஜூலை 23-

எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்து பகாங் மாநில அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மாநில முதலீடு மற்றும் தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ முகமட் நிசார் நஜிப் இன்று வன்மையாக மறுத்துள்ளார்.

அந்த குற்றச்சாட்டில் எள்ளவும் உண்மையில்லை என்று அவர் வாதிட்டுள்ளளார்.

பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் – தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக துரோகம் இழைக்க தாம் எண்ணியது கிடையாது என்று பேரமு ஜெய சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் புதல்வருமான முகமட் நிசார் நஜிப் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS