கோலாலம்பூர், ஜூலை 23-
வங்காளதேத்தில் மாணவர்கள் போராட்டத்தினால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளான தலைநகர் டாக்காவில்
பயின்ற 120 க்கும் மேற்பட்ட மலேசிய மாணவர்கள் இன்று மாலையில் பாதுகாப்பாக நாடு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் பயணம் செய்த விமானம், மாலை 5 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் KLIA 1 முனையத்தில் தரையிறங்கியது.
தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக தாயகம் வந்த சேர்ந்ததை கண்ட விமான நிலையத்தில் குழுமிய குடும்ப உறுப்பினர்கள், அவர்களை கட்டியணைந்துக்கொண்டு அழுத காட்சி பலரது கவன ஈர்ப்பாக மாறியது.
இன்னும் சிலர் இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில் பிராத்தனையில் ஈடுபட்டனர். மலேசிய மாணவர்கள் தலைநகர் டாக்காவில் மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் உயர் கல்வி மேற்கொண்டு வந்தனர்.