கோலாலம்பூர், ஜூலை 24-
அம்னோ மற்றும் பாஸ் ஆகிய கட்சிகள் மீண்டும் ஒத்துழைப்பைஏற்படுத்திக்கொண்டால்,பெர்சத்து கட்சிக்கே பேரிழப்பு ஏற்படும்.
நடப்பில், பேரிக்காதான் நசியனால் கூட்டணி பலம் பொருந்தியதாக உள்ளதற்கு, பெர்சத்து கட்சியைவிட பாஸ் கட்சியே முதன்மை காரணமாக உள்ளதை சுட்டிக்காட்டி, அக்கூற்றை முன்வைத்துள்ளார், AKADEMI NUSANTARA-வைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹாசன்.
மக்களவையில் பாஸ் கட்சி 43 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள நிலையில், பெர்சத்து-வில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, வெறும் 25 உறுப்பினர்களே உள்ளனர்.
பெர்சத்து அரசியலில் வெற்றி பெற, பாஸ் கட்சியைச் சார்ந்துள்ளதாகவும் அஸ்மி கூறினார்.