ஆறுகள் மாசடை விவகாரம்; விசாரணையை தொடங்கியது லுவாஸ்

சிலாங்கூர், ஜூலை 24-

சிலாங்கூர், குவாங்-ங்கிள்ள நெகிழி சார்ந்த தொழிற்சாலையில் கொள்கலனில் ஏற்பட்ட கசிவினால், சுங்கை குண்டாங், சுங்கை செம்பா ஆகிய ஆறுகள் மாசடைந்ததோடு, நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடுகளும் நிறுத்திவைக்கப்பட்டன.

அது தொடர்பில், விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் நீர் நிர்வகிப்பு வாரியம் – லுவாஸ் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் மீது மேல்கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு ஏதுவாக, 1999ஆம் ஆண்டு லுவாஸ் சட்டத்தின் செஷன்ஸ் 79(1) பிரிவின் கீழ், விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

அதேவேளையில், சுற்றுச்சூழல் துறையினரும் செலாயாங் நகராண்மைக் கழகத்தினரும் அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் லுவாஸ் கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS